சனி, 2 ஜனவரி, 2010

பெரிய ராட்சசியும், குட்டி தேவதையும்

அழகான ஒரு அதிகாலை இரவு முழுதும் இடை இடையே எழுந்து என் அருகில் படுத்திருக்கும் மகளை பார்த்துக்கொள்கிறேன்.
ஐந்து வருடங்களை இன்றோடு கடக்கப்போகிறாள்.

படுக்கையில் எப்போதும் வெற்றுடம்புடன் தூங்கும் அவளை பார்க்கும் போதெல்லாம்

நிமிடத்துக்கு நிமிடம் தவிப்பில் இருந்தவனை

அழகாய் ஒரு வெள்ளைத்துணியில் சுற்றி ரோஜா இதழாய்க் கையில் வைத்து என்னிடம் காண்பித்த கணம் என்னுள் வரும்.


இன்றும் அப்படியே ..........


அன்றைய நாள்

எப்போதும் போல் தான் விடிந்தது

குறித்த தேதிக்கு இன்னும் நாட்கள் இருந்தது.

எப்பம் போல ஆபிஸ் வந்துட்டு, மதியம் சாப்பாட்டுக்கு வரும் போதும் கொஞ்சம் சிரமமா இருக்குங்கன்னு சொல்ல, சரி எதுன்னாலும் உடனே கூப்பிடுங்கன்னு கடமை ஆற்ற கிளம்பிட்டேன்

5 மணிக்கு மேல அரை மணிக்கு ஒரு போன்

என் தம்பி கார் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டார்

கிளம்பி போக

பக்கத்து வீட்டு நர்ஸ் அக்கா வந்து வீட்ல ஆறுதலுக்கு இருக்க

நான் 8 மணிக்கு வீட்டுக்கு கிளம்பி போனேன்

என் சகி
முகத்தில சிரிப்பும் !
அகத்தில நடுக்கமுமாக!!

6 மணிக்கு லேசா வலிச்சுதாம் அத எட்டு மணிக்குத்தான் சொன்னாங்க

நர்ஸ் அக்கா சொன்னாங்க எப்படியும் இன்னிக்கு இல்லம்மா
நாளைக்கு மதியம் மேலதான் ஆகும்
ஒன்னும் பயப்படாத அப்படின்னு கூடவே இரவு 11 மணி வரைக்கும் என் சகிக்கு ஆறுதல் வேற

இருக்காதா பின்ன சரியான மாமியார் மாதிரி அவங்கள கவனிச்சிட்டவங்க
எத்தன அட்வைஸ், மிரட்டல், அவங்க சத்தம் கேட்டாவே என் தங்கமணி, எஸ்கேப் ஆகிடுவாங்ன்னா பாத்துக்கலாம்
(என் தங்கமணிக்கு அம்மாவும், அப்பாவும் இல்லை)

அதுக்கும் மேல டாக்டர் அம்மா(டாக்டர்.லலிதா)


மாதாந்திர பரிசோதனைக்கு போகும் போது (அனேகமா 4 மாசம்னு நினைக்கிறேன்)

சகி : டாக்டர் ஏங்க டாக்டர் வெயிட் குறைஞ்சிட்டே போகுது
டாக்டர்: அது நான் கேக்க வேண்டிய கேள்விம்மா! நீ கேக்கற?
ஏன் வெயிட் குறையுது. மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிடறயா
அடுத்த தடவ வெயிட் குறைஞ்சுது, நீ என்கிட்ட வந்துடு நான் பாத்துக்கறேன்.

சகி : டாக்டர் ஏம்வேல புரோட்டின் பவுடர் வருதே அது எடுத்துக்கலாமா?
டாக்டர் : ஏன் உன் ஊட்டுக்காரர்க்கு அதிகமா காசு வருதா?
அப்படி வந்துச்சுன்னா என்கிட்ட கொண்டு வந்து கொடுக்கச்சொல்லு.

சகி : ஹி ஹி ஹி செரிங் டாக்டர்.


இவங்க பத்தி ஒரு குறிப்பு : எங்க குடும்பத்தில பாதிப்பேருக்கு( அண்ணன் குழந்தை 1, தங்கச்சி குழந்தை, சித்திக்கு, அத்தைக்குன்னு ஒரு லிஸ்ட்டே இருக்கு,கைராசின்னு சொல்வாங்களே அது மாதிரி கண்டிப்பு ராசியும் உண்டு, கத்தி வைக்காம(கழுத்தில இல்லங்க வயத்துல) குழந்தைய பத்திரமா எடுத்து கொடுத்துடுவாங்க)


என் அத்தையும் டாக்டர் தான் சென்னைல. வரும் போதெல்லாம் ஏக அட்வைஸ். அது சாப்பிடு இது சாப்பிடுன்னு யார் எது சொன்னாலும் கேக்காத எல்லாமே சாப்பிடு, முக்கியமா வாழைப்பழம் தினமும் இரண்டு எடுத்துக்கன்னு. அவங்க பொண்ணு மாதிரி பாத்துக்கிட்டாங்க)


ம்ம் மேட்டருக்கு வரலாம்

வலி ஆரம்பமான உடனே
நர்ஸ் அக்கா வந்து காலைல போனாப்போதும்
ஆனா உங்களுக்கு போலாம்னு தோனுச்சுன்னா இப்பவே போய் அட்மிட் ஆகிக்கலாம்னு சொல்ல


சரின்னு சகி முஞ்சிய பாத்தா போலாம்னு சிக்னல்

அம்மா, சித்தி, சித்தி பையன் தான் சாரதி (எதுக்குமே வராத ஆள் இதுக்கு வந்து உக்காந்திருந்தான்.)
நானு, என் தம்பி எல்லாரும் சாவகாசமா இட்லி சாப்பிட்டு ஆர அமர 11 மணிக்கு கிளம்பினோம்.

வீட்ல இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் மருத்துவமனை.

தம்பி கார ஓட்டுட்டான்னா அண்ணா போயிட்டுத்தாண்ணா இருக்கேன்கறான்.
அவ்ளோ மெதுவா ஓட்டறாரம்.

அப்படியே ஹாஸ்பிடல் போய் நிறுத்திட்டு என் வூட்டம்மா கார்ல இருக்க சொல்லிட்டு நான் உள்ள போய் கவுண்டர்ல டாக்டர் பேர சொல்லி அவங்க பேசண்ட் அட்மிட் ஆக வந்திருக்கோம் மேடத்துக்கு தகவல் சொல்லிடுங்க, அப்படியே அட்மிசனும் போட்டுடுங்கன்னு சொல்லிட்டு திரும்ப, வார்ட் பாய்(வயசானவங்களையும் பாய்ன்னு சொல்றதுன்ன அது இங்கதான்) வந்து வீல்சேர கொண்டுவந்தார் கார்க்கிட்ட.
உள்ள யாருமே இல்லாத பாத்துட்டு எங்க அந்தம்மான்னு கேக்க, நான் உள்ள கைய காமிச்சேன். என் சகி மெட்டர்னட்டு வார்ட் பக்கம் நின்னுட்டு இருந்தாங்க. அட எப்டிம்மா இதுன்னு ஆச்சரியப்பட்டுட்டே வந்தார்.
எல்லாம் வண்டி வேணும்னு கேப்பாங்க நீங்க நடந்தே வந்துட்டீங்க, அவளோ அவசரமான்னு,

சரின்னு உள்ள அட்மிட் பண்ணாங்க டாக்டர் கிட்ட போன் பண்ணி கேட்டிட்டு.

உள்ள போகும் போது மணி 11.45பக்கம் இருக்கும்.

சரி நீங்க வெளியவே இருங்கனு சொல்லிட்டு உள்ள கூட்டிட்டு போயிட்டாங்க என் சகிய.

என் அம்மாவும் சித்தியும், நானும் இருக்க மத்தவங்க வீடு திரும்ப. 2 மணிக்கு மேல என்னையும் இருக்க வேண்டாம் வீட்டுக்கு போயிட்டு காலைல வான்னு அனுப்ப , நானும் கிளம்பிட்டேன்.

அப்ப மனசுலயும் உடம்புலயும் ஒரு பதற்றம், சந்தோசம் இருந்திச்சு பாருங்க .
அட போங்க அனுபவிக்கனுங்க அத. ஆம்பளையா பொறந்த ஒவ்வொருத்தரும்..

வீட்டுக்குப்போயிம் தூக்கம் வரல், ஹாஸ்பிடல்ல என் சகி போட்ட சத்தம் வீடு வரைக்கும் கேக்குது.
காலைல அஞ்சு மணி எழுந்து அவசர அவசரமா குளிச்சிட்டு. சித்தி அம்மாக்கு சாப்பாடு வாங்கிட்டு கிளம்பினேன்.

ம்கும் சேதி ஒன்னுமில்ல.

6 மணிக்கு மேல ஒவ்வொருத்தரா கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. என்னாச்சு என்னாச்சுன்னு

காலைல டாக்டர் வந்து பாத்துட்டு இன்னும் ஒரு மணி நேரம் ஒரு மணி நேரம்னு 12 மணி வரைக்கும் சொல்லிட்டே இருந்தாங்க

இங்க டென்சன் டென்சன் டென்சன்

சினிமால வர்ர மாதிரி கைய பின்னாடி கட்டிட்டு, பிசைஞ்சிட்டு எல்லாம் கதவ கதவ பாத்திட்டு நிக்கறேன், அப்பவாவது டாக்டரம்மா வந்து கை கொடுத்து ஏதாவது தகவல் சொல்வாங்கனு பாக்கறேன், ம்கும்
டாக்டரம்மா பின்னாடி வழியா வந்துட்டு பின்னாடி வழியாவே போயிடறாங்க.

சரி ஏதாச்சும் சிஸ்டராச்சும் வெளிய வருவாங்க வேகமா ஒரு டாக்டரோட உள்ள போவாங்கன்னு பாத்தா ச் அதும் இல்ல.
அட போங்கப்பா ஏதோ ஒரு சினிமா டைரக்டருக்கு மட்டும்தான் அப்படி நடந்திருக்கும்போல அதையே எல்லாரும் காப்பி அடிச்சிட்டாங்க போல.

காலைல இருந்து சாப்பிடாமயே இருந்தும் பசியே இல்ல, அட வாழ்க்கை முழுசும் இப்படி ஒரு வரம் கிடைக்காதா என்ன.

12.00
12.01
12.02
12.03
12.04
12.05
12.06
12.07
12.08
12.09
12.10
12.11
12.12
12.13
12.14
12.15
(அடக்கொடுமையே நிமிசத்துக்கு நிமிசம் சொல்றானேன்னு நினைச்சா! நான் மாத்திக்கறேன்)
12.45
1
1.15


இப்டி ஒவ்வொரு நிமிசமும் டென்சன் டென்சன்
கதவு திறக்கும் போதெல்லாம் உள்ள என்னவளின் கதறல்

டாக்டரின் சமாதானம்

உண்மையிலேங்க
குழந்தைக்கா அவங்க வலில கதர்றாங்க
நாம(ஆண்கள்) இரண்டுபேருக்காகவும் உள்ளுக்குள்ள கதறுகிறோம்.

டாக்டர் கூப்புட்டாங்க போனோன்

என்னங்க அவஙக் ஒத்துழைக்க மாட்டேங்கறாங்க, சிசேரியன் பண்ண எனக்கு விருப்பமில்ல
நீங்க சொன்னா பண்ணலாம், இல்ல இன்னும் கொஞ்ச நேரம் பாக்கலாம்.

என்னால முடியல, என்ன சொல்ல தெரியல பேசமலே இருக்க சரி கொஞ்ச நேரம்பாக்கலாம்னு சொல்லிட்டு போயிட்டாங்க.

2.15 வரைக்கும் பாத்துட்டு ஆப்ரேசன் தியேட்டர் தயாராக ஆரம்பிச்சுடுச்சு.
உள்ளயும் கொண்டு போயிட்டாங்க.

2.35
எங்கள் குழந்த உலகம் பார்க்க ஆரம்பிக்கும் நேரம்
தலை வெளிய வர முடியால்
இடுக்கியால் தலைய பிடித்து எங்கள் குழந்தையை வரச்சொல்ல
வந்தே விட்டாள்
4.35

செய்தி மட்டும் வந்தது. என் சகி என் பேச்சுக்கு பயப்படாத, யார் பேச்சுக்கும்பயப்படாதவள்
கத்திக்கும்
டாக்டரின் கத்துக்கும்
இளகிவிட்டாள்
என்று

15 நிமிடத்தில் 9 மாதங்களாய் உள்ளிருந்தவள் இப்போது வெளியே எங்கள் பார்வைக்காய்
சிறு ரோஜாப்பூவாய் ம்கும் என் மகளாய் ஒரு அடிக்கும் சற்று அதிகமாய்
2.800 கிராமுக்கும் அதிகமாய் உள்ளங்கையில் ஒரு வெள்ளைத்துணியில் கொட்டி வைத்த ரோஜாவாய்
எங்கள் மகள்
உள்ளுக்குள் வைத்திருந்த சந்தோசம் எல்லாம் கண் வழியே கண்ணிராய்(அட அப்போதுதான் தெரிந்தது சந்தோசம் என்பது திரவ வடிவம் என்று)

அடி வயிற்றில் ஏதோ நழுவி உருண்டு புரண்டது.
என்னது என்னவளுக்கு எப்படி இருக்கும் சந்தோசமே இப்படி கண்ணீராய் வருகையில்
தேவதை வெளியே வந்த பின் எப்படி இருக்கும்.

சொல்லடி எனக்கு உன் சந்தோசத்தை
சொல்ல முடியவில்லை எனில்
ஒற்றைச்சிரிப்பில்
சிறு கண்ணசைவில்
என்னை
அழுத்திப்பிடிக்கும்
உன் கைகளினால்

உடனே நான் தகவல் சொல்ல நினைச்சது

என் அப்பா கிட்ட

ஆமாங்க இத்தன வயசு வரைக்கு,
அப்பா ஆயிட்டேன்னா குழந்த கருவுல உருவானாவே கிரீடம் வந்த மாதிரின்னு நினைச்சேன்

அன்னிக்கு தோனுச்சுங்க
அப்பா ஆயிட்டேன்னா என்னான்னு
அவரை
உருக்கி
என்னை
கருவாக்கி
உருவாக்கி
வளர்த்து
ஆளாக்கும் அத்தனை அனுபவங்களையும்
எனக்குகொடுத்து
அப்பாவின் அனுபவங்களைப்பெற்றதால் நீ அப்பா ஆனாய் என்பதாய்


அம்மாவுக்கும் அதேதானுங்க


ம்ம்சரி அடுத்த கட்டம் போகலாம்

போன்ல கூப்புட்டு

அப்பா...

எம்மா

பொண்ணுங்க்ப்பா

ஓ சந்தோசம்ப்பா 2 பேரும் நல்லாருக்காங்கள்ள


ம்ம் ம்ம் பேசமுடிலீங்ப்பா அப்ரம் அப்ரம் ( கூப்பிடறேன்னு கூட சொல்ல முடியல தொண்டை அடைக்குது)

சரிம்மா சரி
நீ பாரு நான் வர்ரேன் நாளைக்குங்கறார் அதுக்குள்ள கட் பன்ணிட்டேன்.

(50 வயசுக்கு மேல ஆகியும் போனே உபயோகப்படுத்தாத அவர் இதற்க்காகவே போன் வாங்கிருந்தார் 2 நாள் முன்னாடியே)

ம்ம் அடுத்து என்ன பண்ண 2 நாள் அங்கயே தங்க அறை ஏற்பாடு பண்ணனும் கிட்டத்தட்ட கல்யாண மண்டபம் துளாவற மாதிரிதான். காலைல இருந்து அங்க பேசி இங்க பேசி அறை ஏற்பாடு பண்ண முடியாம் (15 நாளைக்கு முன்னாடியே அறை புக் பண்ணவங்களுக்கே கிடைக்கலன்னு கவுண்டர்ல பேச அழுகையே வந்திடுச்சு) என் மகள் பிறந்த நேரம் அடுத்த அரை மணி நேரத்தில் என் மகளுக்கு அறை ஒதுக்கப்பட்டது.


முதல்ல என் மகள் தான் அறைக்குள் வந்தாள் நாங்கள் காத்திருக்க ஒரு சிறு பெண்ணை இரட்டைச்சடை போட்டு ஹாஸ்பிடல் டிரஸ் மாட்டி அறைக்கு அழைத்து வர அந்தப்பெண் என்னைப்பார்த்து சங்கடமாயும் சந்தோசமாயும் சிரிக்க அட இத எங்கயோ பாத்திருக்கமேன்னு மண்டைய தட்டினா, அடப்பாவமே இந்தப்பொண்ணு நம்மகூட 4 வருசமா கூடவே இருந்த பொண்ணாச்சே புதுசா ஒரு பொன்னு வந்ததும் இந்த பொன்ண கவனிக்கலன்னு பேர் வரக்கூடாதே எனக்கு வந்தாலும் பரவாயில்லை இன்னைக்கு வந்த தேவதைக்கு வரக்கூடாதேனு சிரிச்சி வச்சேன்


அறைக்குள் வந்தது எங்க மூணு பேரையும் விட்டுட்டு போகாம என் அம்மா சித்தி எல்லாம் நிக்க

ஒரு அக்கா(சிஸ்டருங்க) மட்டும் வந்து வாங்க வாங்க எல்லோரும் வெளிய இருங்க தனியாஇருக்க விடுங்கன்னு சொல்லிட்டே என்ன பாத்து சிரிக்க

என் அம்மாவும் சித்தியும் வெளிய தள்ளிட்டே போயிட்டாங்க அந்த அக்கா

அங்க நடந்த அந்த விசயம் இன்னிக்கு வரைக்கும் மறுபடி நடக்கல

உணர்ச்சிகரமான அந்த நிமிடங்க இன்னும்
மனசுக்குள்ள,
இரத்ததுல..
இப்பவும் என் சகிய சில நேரம் தோள்ல சாய்ச்சுக்கும் போது வரும் பாருங்க .................


கொஞ்ச நேரம் கழுச்சி வந்த அந்த அக்கா என்னங்க போதும் கொஞ்சம் வெளிய இருங்கன்னு சொன்னப்ப வெட்கமும் வரலங்க கூச்சமும் வரல

ஆச்சரியம்
ஆச்சரியம் மட்டும்தாங்க

தாதிகள் பற்றிய எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமா ஒடஞ்சுது பாருங்க. அது அங்கதாங்க.

முகம்பார்த்து என்ன தேவை என்பதை உணர்ந்தவர் அவர்
(அந்த நிமிசங்களுக்காக, இந்த நிமிசம் அவங்களுக்கு என் நன்றிகள மறுபடி சொல்லனும்)

இல்ல எல்லா கணவர்களுக்கும் இது அமையுமான்னு தெரியல.

என்னுடன் ஒப்பிட இத சொல்லல

எனக்குத்தெரிந்த நபர்(சொந்தக்காரர்னு கூட சொல்லலாம்) தன் மனைவிய பிரசவத்துக்கு அப்புறம் பக்கத்தில இருந்தும் பாக்க போகல, என்ன குழந்தைன்னு கேட்டா பையன்னு சொன்னாங்கனு சொன்னார். குழந்தை என்ன எடைன்னா யாருக்கு தெரியும்னு பதில், நார்மலா,இல்லையான்னு கேட்டா தெரிலங்கறார்.)

தகவல் தெரிஞ்சு எல்லாரும் வர ஆரம்பிச்சாங்க

வர்ரவஙக எல்லாம் எங்க குழந்தைய பார்த்து அப்படியே அப்பா மாதிரின்னு சொல்ல

நமக்கு இன்னும் ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு இருந்துச்சு பாருங்க.

மூன்று நாட்களும் வேலைக்கு போகல

என் தேவதை(க)கூடவேதான்.

எல்லாம் முடிஞ்சுது உன் தேவதைகள கூட்டிட்டு கிளம்புண்டாங்க ஹாஸ்பிட்டல்ல
(கூட இருந்து எல்லாம் சொல்லுக்கொடுத்த எங்கள் வார்ட் தாதிகளுக்கு எல்லாம் ஒரு பெரிய நன்றி)

என் குட்டி தேவதைய இரவு நேரம் பார்த்துக்க ஒரு தாதி தேவதைய அனுப்புனாரு பாருங்க(கடவுள் அது அந்த ஆஸ்பிடல் மேனேசரா கூட இருக்கலாம்)

அழகான மலையாள தேவதைங்க அது,

என் சகிகிட்ட சொன்னாங்களாம்

இப்படி ஒரு வீட்டுக்காரர (அட அதாங்க என்ன) பார்த்ததில்லங்க கூடவே இருந்து எவ்ளோ அழகா, அக்கறையா கவனிச்சிக்கிட்டார், என் சர்வீஸ்ல இப்படி ஒரு வீட்டுக்காரரையும், அப்பாவையும் நான் பார்க்கலன்னு ஒரு சர்டிபிகேட் கொடுத்தாங்க பாருங்க.

என்னா அத எங்கிட்ட சொல்லிருந்தா பெரிய வெகுமதி கொடுத்திருக்கலாம், என் ரங்கமணிகிட்ட சொல்லப்போய் பெரிய லந்தாகிடுச்சு. இப்பவும் என் ரங்கமணி எனக்கு ஆப்பு வைக்க அது உதவுது)


தொடரும்.....

4 கருத்துகள்:

அச்சு சொன்னது…

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க மாம்ஸ். படிக்க படிக்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.

கோல்ட்மாரி சொன்னது…

சொல்லடி எனக்கு உன் சந்தோசத்தை
சொல்ல முடியவில்லை எனில்
ஒற்றைச்சிரிப்பில்
சிறு கண்ணசைவில்
என்னை
அழுத்திப்பிடிக்கும்
உன் கைகளினால்


அருமையா எழுதி இருக்கிங்க ! அடிச்சி கிளப்புறிங்களே

Thenie சொன்னது…

அண்ணா ரொம்ப அருமையா இருக்கு
பட்டுக் குட்டியோட வருகையை அருமையா எழுதி இருக்கீங்க

Unknown சொன்னது…

very nice

Sathyamoni