செவ்வாய், 21 அக்டோபர், 2008

மாலை நேரம்

இது கோவையின் சனிக்கிழமையின் (18/10/2008 (மாழை)மாலைப் பொழுது (அவினாசி சாலை) இதுவும் நோக்கியா 6233 ல் எடுத்ததுதான் இது எடுத்த 15 நொடிகளில் மழை கொட்ட ஆரம்பித்ததுதான்

வானவில்

என் வானவில்

ரிதன்யாவின் ரசிகர்களில் ஒருவர்
ரிதன்யா போட்டோவுக்காக இந்த கவிதை

மனதை மயக்கும் ஒரு
மாலையில் வெளிவந்தாய் நீ!
குளிர்காற்றோடு அஸ்தமனத்தை
காண்பதற்காய்!
மனித எண்ணங்களின் பலமுகங்களை
பிரதிபலிக்கும் வானவில்லின்
இயற்கையினை வியந்து
இதழ்விரித்து உன் தந்தையை
அழைத்தாய்!
கருவிழிகளை திறந்து நீ
வானவில்லை நோக்குகையில்
ஒரு தேவதையின் அழகான
முகபாவங்களை ரசிக்கிறேன் நான்!
உன்னையே வியக்கவைத்த
வானவில் அழகுதான் ஒத்துகொள்கிறேன்
என்னை வியக்க வைத்த நீ
வானவில்லை விட அழகுதான்
என்பதை உலகம் ஒத்துகொள்ளதான் வேண்டும்

தணிகை(மாமா)
============================================
ரிதன்யாவின் அத்தை தேனி(கொழும்பிலிருந்து)
வானவில்லின் வர்ணங்களை
ரசிக்க மறந்து
உன் ஆச்சர்யத்தின்
அழகை ரசிக்க தொடங்குகிறேன்

சின்ன இதழ் விரிந்து
கரு விழிகள் உயர்த்தி
பார்க்கும் போது
வானவில் ஒரு மாத்திரையா?

=============================================
வானவில்லின் அத்தனை வண்ணமும்
உன் ஆச்சரியங்களின் முன்
போட்டியிட முடியவில்லையோ!!!

(ரிதன்யாவின் அத்தை பூ பூவா பூர்ணிமா)

வானவில்

வானவில்

வானவில்

இரண்டு வானவில்

வானவில் பாருங்கள்,
அழகான ஒரு மாலைப்பொழுது
இன்னும் அழகானது
வீட்டினுள் இருந்த என்னை
என் பெண்ணின் சத்தம்
வெளியே வர வைத்தது.
'அப்பா வானவில் பாரு'
வந்து பார்த்துவிட்டு
கேமிரா இல்லாதாதால்
அவசரத்திற்கு
கையிலிருந்தது நோக்கியா 6233
அதில் எடுத்தது .
எப்படி இருக்கிறது பார்த்து சொல்லுங்கள்.

===============================================

திங்கள், 20 அக்டோபர், 2008

ஒரு நாள் பாட்டியோடு போனில்
பாட்டி: ஊருக்கு வரலியா

நான் : மறந்திட்டேன் பாட்டி

பாட்டி: என்னய மறந்திட்டியா பாப்பு ?

நான் : அய்யோ அய்யோ உன்ன மறக்கல பாட்டி ஊருக்கு
வர மறந்திட்டேன்
பாட்டி : சரி தீபாவளிக்கு வரியா.

நான்: ம் வெள்ளியன்னிக்கு வர்ரேன்

பாட்டி : அத்த நீ வி ஐ பி யாம் நீங்க வரமாட்டிங்க அப்படி
சொல்லராங்க

நான் : அப்படியெல்லாம் சொல்ல கூடாது சொல்லுங்க
இல்லனா பாப்பா வந்தா அடிப்பானு சொல்லுங்க

பாட்டி: ஹா ஹா ஹா

நான்: அய்யே சிரிக்காதீங்க.