வியாழன், 20 ஆகஸ்ட், 2009

வணக்கம்

ஆளில்லா டீக்கடைல யாருக்கு டீ ஆத்தறதுன்னு பாத்தா எல்லாம் ஆகாதுங்க, ஆத்தறேன் வந்து சேருங்க எல்லாரும்.

ரிதன்யாவுக்கு இன்னைக்கு பிறந்த நாள் (அதாங்க எனக்கு)

இன்னிக்கு என்ன வாழ்த்தினவங்களுக்கு என் நன்றிகள்

++++++++++++++++++++++++++++

வாழ்த்தினவங்க

++++++++++++++++++++++++++++

தேனு  (பிரிய அத்தை இருப்பது கொழும்புல)

 

வானுலகம் கொஞ்சம்

அலுத்துப் போக

பூமிக்குப் போகலாம்

முடிவெடுத்ததாம் தேவதை !

மனிதராக போவதெனில்

பிறந்து குழந்தையாய் வாழ வேண்டும்

கடவுள் சொன்னாராம்

தேவதையும் யோசித்தாளாம்!

தனக்கென இல்லம் தேடி

அங்கே தன் பிறப்பை முடிவெடுத்தாளாம்

இன்று போல ஐந்து வருடம் முன்பாக

தேவதை வந்து சேர்ந்தாளாம் குழந்தாயாய்!

எங்கள் வீட்டு தேவதைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

++++++++++++++++++++++++++++

ரிதன்யா


அத்தை என்பாள்
சில நேரம் அக்காவும் சொல்லுவாள்
ஆனால் எப்போதுமே
தேனாண்டி தான்!
ஆம் அவள் அன்பின் முன்
நான் ஆண்டிதான்!
சுருள் முடியுடன்
நித்திரை கலைந்து
விளையாடியது முதல்
அவளின் ஆளுகை என் மனதில்!
தூக்கிச் செல்ல உடல் வலித்தாலும்
மனது வலிக்காத சுமை அவள்!
கொஞ்சம் கோபம்
நிறைய பிடிவாதம்
அளவில்லாத அன்பு
புரிந்து கொள்ளும் பக்குவம்
ரோஜாத் தோட்டமே வியந்தது
ஓடும் ரோஜா இவளென!
ஒரு வருடம் வாடாது என
வாங்கி வந்த குறிஞ்சிப் பூவிலும்
கொஞ்சம் கூட மறக்காத
ரிதன்யாவின் புன்னகை
மறக்கடிக்க முடியாத வாசம்
மதுரை மல்லிகையிலும் இல்லை!
நிலவுடன் இரவில் பேசலாம்
ஆசையுடன் அழைத்தேன் 12 மணிக்கு
ஆண் குரல்(:P) தூங்கிட்டா என்றது
ஏக்காமாய் முடிந்து போன இரவில்
கனவில் கூட வந்து தேனாண்டி என்றாள்!
திடீரென செல் அழைக்க
எடுத்துப் பார்த்தேன் அண்ணா
தேனாண்டி இன்னிக்கு எனக்கு பர்த்டே
தேன் குரலா இல்லை கனவா
புரியும் போது பெருமையாய் இருந்தது
தேவதையுடன் பேசியிருக்கிறேன் நான் என!
பட்டு மிஸ்ஸிங் யூடா (கண்ணீர் திரை இனி எழுத முடியாது)

++++++++++++++++++++++++++++

செந்தில்
(அப்பாவின் நண்பர் சென்னைல இருந்து)
ரிதன்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

++++++++++++++++++++++++++++

துரை.ந.உ

(அப்பாவின் நண்பர் தூத்துக்குடில இருந்து)

குட்டிப் பாப்பாவுக்கு மாமாவின் வாழ்த்துக்கள்

++++++++++++++++++++++++++++

டாக்டர். சங்கர் குமார் to muththamiz

அத்தையென அழைக்க ஒருத்தி!

வாழ்த்துகள்!

++++++++++++++++++++++++++++

சாந்தி (குழும அத்தை இவங்க )


தங்கமாய் தாங்கிட தாயிருக்க
  தரணிக்கு புகழ்சேர்க்க தகப்பனிருக்க
தலைமகள்  வெற்றிகொள்ள வாய்ப்பிருக்க
தவமாய் வந்துதித்த செல்லக்கிளியே


அன்பினால் அனைவரையும் நீராட்டி
  அகப்பண்பினால் பலநேசம் பெறுவாயம்மா
அறிவுத்திறன் ஜொலிக்க சரஸ்வதியும்
   அழகாய் அருகிருந்து வாழ்த்தணு்மம்மா.


பல்லாண்டு வள நலமும் நீயே பெற்று
  பலகாலம் சுகமாய் வாழ்ந்திடணும்
பார்போற்றும் புகழெல்லாம் உனைசேர்ந்து
  பாரதமும் உன்பெருமை போற்றிடணும்..

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இளவரசியே..

++++++++++++++++++++++++++++

சுவாதி சுவாமி

(இவங்களும் அத்தைதான்)

குட்டித் தேவதைக்கு எமது அன்பான பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
இன்று போல் என்றும்  இனிய தேவதையாக  உலகை வலம் வந்து,

அரிய சாதனைகள் பல செய்து, பெருமையாய் வாழ நல் வாழ்த்து பாடுகிறோம்.
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா!
இதயம் நிறையவே தமிழ் கவிதை பேசி வா!
மலரும் மணமும், நதியும் நடையும்
தலை கவிழும் உன் அழகின் முன்னே
இதயம் முழுக்க இனிமை சுவைக்க
பதியம் வைத்த தமிழ் வாழ்த்து உனக்கே!!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

அன்புடன்
சிநேகன் ,சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்.

++++++++++++++++++++++++++++

அஹமத் சுபைர்

(அப்பாவின் நண்பர்)

என் பிறந்த நாள் வாழ்த்துகளை இளவரசியிடம் சொல்லிடுங்க தேனாண்டி :-)

++++++++++++++++++++++++++++

நாயகன்

ரிதன்யா குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து
கொள்கிறேன்.
என் சார்பாக மஹி அண்ணா நீங்களே ஒரு சின்ன சாக்லேட் மற்றும் ஒரு பொது
அறிவு சம்பந்தமான புத்தகம் பரிசாக வழங்கவும்..

++++++++++++++++++++++++++++

சஹாரா தென்றல்  (அத்தை)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிதன்யாவுக்கு
மறக்காம வாழ்த்துக்களை சொல்லிடுங்க அண்ணா

++++++++++++++++++++++++++++

கிருச்சுனசுவாமி பொன் சுந்தர்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க மகி சார், ரிதன்யா மாடத்துக்கு

++++++++++++++++++++++++++++

வி ரமேஷ்
இனிய மலர்ந்த நாள் வாழ்த்துகள் ரிதன்யா

++++++++++++++++++++++++++++

இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு. மஹி(மாம்ஸ்) அவர்களின் குட்டி தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
அச்சு(சுதாகர்)

++++++++++++++++++++++++++++

பாலாஜி பாஸ்கரன்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரிதன்யா!
(மகி, சாக்கியை தேனுசா கிட்ட காட்டிடாதீங்க! )

++++++++++++++++++++++++++++

முகமூடி

மாம்ஸ்.. இதெல்லாம் அநியாயம்...

ஒரு சாக்கிகூட இல்லாம வெறும் நாலு நன்றிய சொல்லி ஏமாத்தப்பாக்குறீங்க...

குட்டி தேவதைக்கு பிறந்தநாள்  நல்வாழ்த்துக்கள்....

++++++++++++++++++++++++++++

chillu karupatti

சில்லுக்கருப்பட்டி என்கின்ற உமா(இவுங்க நாகப்பட்டினத்தில பெரிய ஜாக்கிங்க, குதிரை ஓட்டற ஜாக்கி இல்ல, ரோடியோ ஜாக்கிங்க)

எங்க‌ள் வீட்டு செல்ல‌ குட்டிக்கு அத்தையின் இனிய‌ பிற‌ந்தநாள் வாழ்த்துக‌ள்.....

++++++++++++++++++++++++++++
வினோத்-VINOTH

(இவருதான் தமிழ் நண்பர்களுக்கு தலைங்க)

ரிதன்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

++++++++++++++++++++++++++++

Joseph Kuriyan

குட்டி தேவதைக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்,

எல்லா நலனும் பெற்று வாழ இறை வேண்டுதலோடு

ஜோசப் பி கே
இருட்டாய் இருக்கிறது என்பதைவிட
சிறு வெளிச்சத்தையாவது ஏற்படுத்த முயற்சி செய்.

++++++++++++++++++++++++++++

Arul Jothi

en iniya pirantha naal nalvazhthukal............. to rithanya kutty

++++++++++++++++++++++++++++

ராஜா

ரிதன்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

++++++++++++++++++++++++++++

உதயன்


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

++++++++++++++++++++++++++++

முகமூடி

 

நடந்துவா.. தேவதையே...

சின்னச்சின்ன கனவுகளுக்குள்

விகசித்து விரிந்து கிடக்கிறது வானம்....

வண்ணத்துப்பூச்சியாய் நீ

வருடிவிட்டதில்

தீர்க்கதரிசியாகிப்போயின பூக்கள்...

உன் மழலை

மொழி கேட்கத்தான்

ஒலிகள்

புதுப்பரிணாமம் பெற்று

மொழிகளாகிப்போயிருக்கிறது...

உன் சருமத்தைத்

தீண்டியதால் காற்றும்

தென்றலாய் இதமூட்டுகிறது...

மழையின் சொட்டுக்கள்

நீ

இதழ்பதிக்கும்

குளம்பிக்கோப்பையில்

மனதைப் பறிகொடுத்து

குழம்பித்தான் கிடக்கிறது....

உன் பாத விரல்கள்

பஞ்சுமெத்தை போல...

நீ மிதித்து நடந்ததில்

பூமியெங்கும் புல்வெளிகளாகி

பூரித்துக்கிடக்கிறது....

நீ... நான்... நிலா....

வானம் பார்த்துச்

சோறு ஊட்ட நினைக்கிறோம்..

நம் மழலைகளுக்கு..

விஞ்ஞான யுகத்தில்கூட

இன்னமும் வானம் பார்த்த

பூமியாகவே வாழ்வு இனிக்கிறது...

நேச விதையை

மண்ணில் ஊன்றி

அந்நாந்து பார்த்ததில் -

விண்ணொத்து வளர்ந்து

மண்ணில் வேரூன்றியிருந்தது..

ஒரு விருட்சம்...

அலைபேசிச் சத்தங்களும்..

அழைப்பு மணிச் சந்தங்களும்...

சத்தமாய் சிலமுறை

கத்திவிட்டுப்போயின

உன்

பிறந்த நாள் - உலகின்

சிறந்த நாள் என்று சொல்லி...

ஐந்தாவது அகவையில்

அடியெடுத்த உன்

தளிர் நடை கண்டு

விடியலுக்குத் தொடங்கிவிட்டது

வானம்...

உன்

வழிநடத்தலுக்கென ஏங்கி

நாளைய சமுதாயம்

வழிவிட்டுக் காத்திருக்கிறது...

நாங்களும் காத்திருக்கிறோம்

ஏக்கத்துடன் சிலநேரம்

தூக்கமின்றிப் பலநேரம்...

நடந்துவா...

உயிரினம் வாழும்

இந்த ஒரே பூமி

ஒரு புதிய பரிணாம

வளர்ச்சிக்கென

ஏங்கிக் காத்துக்கிடக்கிறது...

ரிதன்யா பாப்பாவுக்கு..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/

++++++++++++++++++++++++++++

*
நீ
வானவில்லை
ரசித்திருந்த தருணமொன்றில்
என் மாமன் எடுத்திருந்த
புகைப்படத்திலுனை பார்த்தேன் முதலாய்
நான்!
*
அலைபேசியில்
ரீங்காரமிடும் உன் குரலை
மீட்டும் இதழ்கள் ஆச்சர்யத்தில்
திறந்திருந்த அந்த அழகினை
கவிதையாய் வடித்தெடுத்து
அனுப்பினேன் மாமனுக்கு!
*
மகளுக்கு
கவிபுனைந்து மாமனிடம்
கொடுத்த
முதல் மாப்பிள்ளை நானாக தான் இருப்பேனோ!
*
"ரிதன்யா"
பெயருக்கு ஏற்றார்போல்
ரிதமாய் ஒலிக்கும்
உன் மழலைமொழியில்
மகிழுமடி உலகமே"
இந்த மாமன்
மயங்கித்தான் போனேனடி
மயிலிறகே!
*
ஐநூறு மைல்
தாண்டி வந்திருந்தேன்
உனை பார்க்க!
வந்தவுடன் மடியமர்ந்து
மழலைமொழி பேசி நீ
மழையாய் பொழிந்த அன்பிலே
நனைந்து போய் நின்றேனடி
நகைக்குயிலே!
*
நேற்று
உன் பிறந்தநாளென்று
முட்டாப்பய மாமனெனக்கு
தெரியாம போயிடுச்சு
செல்லமே!
*
விடுமுறையில்
போயிருந்தேன்!
இப்போ விட்டுப்போன
முறையா எட்டி நின்று
பார்க்குறேண்டி செல்லமே!
*
அருகில் வந்து
மடியமர்த்தி காதுமடலில்
உனக்கு மட்டும் சொல்லுறேண்டி
செல்லமே!
இன்னைக்கு போல
என்னைக்கும் நீ
நல்லா இருக்கோனுமடி செல்லமே!
*
"இனியபிறந்த வாழ்த்துகள் ரிதன்யா"

--
என்றும் அன்புடன்
பரட்டை.
(திருத்தப்பட்டும் திருந்தாத தலைகள் இன்னும் உலவுவதால்)
http://jthanigai1.blogspot.com/
http://parattaionline.blogspot.com/

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சொக்கத்தங்கம்

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,

 

[ist2_2822691-happy-birthday.jpg]

உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?

மழைக் காலம், கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!

மாம்ஸ் பெத்ததால் நீ மருமகளா -இல்லை

நீ மருமகள் ஆனதால் அவர் மாம்ஸ்சா

எது எப்படி இருந்தாலும்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்டா செல்லம் !!

-
கோல்ட் மாரி
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
தொல்லை பண்ணுவோர் சங்கம்

++++++++++++++++++++++++++++

மாம்ஸ், உங்க குட்டி தேவதைக்கு என் இனிய பிறாந்தநாள் வாழ்த்துகள்

அன்புடன்
ரோபோ

++++++++++++++++++++++++++++

 
இந்த மாமனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் குட்டி தேவதைக்கு ..

வாழ்த்துக்களுடன்

விஷ்ணு ...

ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்    : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்    : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்     : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குட்டிப் பாப்பாவுக்கு இந்த 'தாத்தா'வின் வாழ்த்துக்களும்! :-))

தமிழன் வேணு

++++++++++

கந்தவேல் ராஜன்(மதுரை)

HappyBirthdayAnimation.gif image by acootis

 

செல்லக்குட்டி ரிதன்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

++++++++++

ராஜராஜன்

குட்டி தேவதை ரிதன்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

++++++++++++

M.RISHAN SHAREEF
to therakathal, தமிழ், thiruvilayadal, piravakam, முத்தமிழ், tamil2

 

குட்டிப் பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

+++++++++++++++++
Suthersan C
Tamil2Friends

ரிதன்யா ஐ பெயர் நல்லா இருக்கே பாப்பாவுக்கு.  ரிதன்யா குட்டிக்கு இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துக்கள்.

 

++++++++++++++

விஜி(கனடா)
to muththamiz, tamil2, Piravakam

 

ரிதன்யா
அத்தை என்பாள்
சில நேரம் அக்காவும் சொல்லுவாள்
ஆனால் எப்போதுமே
தேனாண்டி தான்!
ஆம் அவள் அன்பின் முன்
நான் ஆண்டிதான்!<<<<

நெஞ்சைத்தொட்ட வரிகள்...தேனு...மிக அழகு...

ஒரு பாப்பா இப்படியொரு பாசக்கவிதை வடிக்குதே....>>>சுருள் முடியுடன்
நித்திரை கலைந்து
விளையாடியது முதல்
அவளின் ஆளுகை என் மனதில்!
தூக்கிச் செல்ல உடல் வலித்தாலும்
மனது வலிக்காத சுமை அவள்!<<<

குழந்தைகள் எப்போதும் சுகம்..


கொஞ்சம் கோபம்
நிறைய பிடிவாதம்
அளவில்லாத அன்பு
புரிந்து கொள்ளும் பக்குவம்
ரோஜாத் தோட்டமே வியந்தது
ஓடும் ரோஜா இவளென!<<<<<

அடடா! நம்மளை அப்படியே உரிச்சு வைச்சிருக்குதே!! குழந்தைகள் என்றாலே இப்படித்தான் போலும்:)))


<<<ஒரு வருடம் வாடாது என
வாங்கி வந்த குறிஞ்சிப் பூவிலும்
கொஞ்சம் கூட மறக்காத
ரிதன்யாவின் புன்னகை
மறக்கடிக்க முடியாத வாசம்
மதுரை மல்லிகையிலும் இல்லை!<<<<

வாசம் உங்கள் வசம்.


நிலவுடன் இரவில் பேசலாம்
ஆசையுடன் அழைத்தேன் 12 மணிக்கு
ஆண் குரல்(:P) தூங்கிட்டா என்றது
ஏக்கமாய் முடிந்து போன இரவில்
கனவில் கூட வந்து தேனாண்டி என்றாள்!

நல்லது நல்லது!! :) குழந்தைங்க கனவில் குழந்தைங்க தான் வரும்.


திடீரென செல் அழைக்க
எடுத்துப் பார்த்தேன் அண்ணா
தேனாண்டி இன்னிக்கு எனக்கு பர்த்டே
தேன் குரலா இல்லை கனவா
புரியும் போது பெருமையாய் இருந்தது
தேவதையுடன் பேசியிருக்கிறேன் நான் என!
பட்டு மிஸ்ஸிங் யூடா (கண்ணீர் திரை இனி எழுத முடியாது)

துடைத்துவிட்டு எழுத வேண்டியதுதானே...இனிய வாழ்த்தை மருமகளும் ரசிப்பாளே!..

எத்தனை எத்தனை இடர்கள் வந்து

நம்மைச் சூழ்ந்திருந்தாலும் அத்தனையும்

பறந்துபோகும் கொஞ்சும் மழலைமொழியில்

நெஞ்சம் அள்ளிச்செல்லும் குழந்தை

உள்ளம் என்றும்!

மாறா சிரிப்புடனே மறவாத்தமிழுடனே!

வாழ்க வளர்க என்றும்!

செல்லக்குட்டிக்கு இனிய வாழ்த்துகள்!

++++++++++++++++++++++++++++

Gokul Kumaran

அன்பு ரிதன்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
--
ப்ரியத்துடன்,
கோகுல்
http://pittujokku.blogspot.com/

+++++++++++++

vishalam raman ( piravakam)

 

குட்டிதேவதைக்கு என் அன்பு கனிந்த வாழ்த்துகள் அன்புடன் விசாலம்

++++++++++++++++

piravakam

 

இந்த மாமனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் குட்டி தேவதைக்கு ..

வாழ்த்துக்களுடன்

விஷ்ணு ...

++++++++++++++++++
காமேஷ்
muththamiz, தமிழமுதம்,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிதன்யா பாப்பாவுக்கு

~காமேஷ்~

 

+++++++++++
therakathal

 

ரிதன்யாவிற்கு  இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று  பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்


+++++++++++++

 

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சாட்ல சொன்னவங்க

 

emalathithan:  உங்களது குட்டி தேவதைக்கு என்னுடைய பிறந்த நாள் நல வாழ்த்துகள்....

 

achusudhakar:  convey my wishes to your குட்டி தேவதை

 

Balaji:  என்னுடைய இனிய வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள் குட்டி தேவதைக்கு!

 

Priya:  happy birhday rethy kutty

 

 

chilludhosth007:  hi anna

kuttiku birthd ay wishes nanum ashwinum wish panrom

sollidunga

 

Gold:  மாம்ஸ் என்னோட மருமகளுக்கு பிறந்த  நாள் நல்வாழ்த்துக்கள் சொல்லுங்கோ !

 

 

Charu:            மாம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்

தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லுங்க

 

Mani:  many more whishes to your little angel by the name of god...

வியாழன், 26 மார்ச், 2009

தாயம் 1

கோடை வந்துவிட்டதன் அறிகுறியோ என்னவோ கடந்த வாரத்தில் எங்கள் பகுதி் குழாயில் சரியாக தண்ணீர் வரவில்லை.அதனால் 'அட்டாலி'யில் கிடந்த வீட்டு சொந்தகாரரின் பெரிய அண்டாவில் நீர் நிரைத்துக் கொள்ள எடுத்தோம்.அதில் கிடந்த தட்டு முட்டு சாமானங்களுக்கு இடையில் , அட! பாண்டி(பல்லாங்குழி) அது கிளறிய ஞாபகத்தின் தாக்கம் இவ்விழை.தமிழ்நாட்டின் பல விளையாட்டுக்களை நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை , எல்லா பிள்ளைகள் கையிலும் பொம்மை , வீடியோ கேம்.இன்னும் சில காலம் போனால் தமிழர்களுக்கு என்று விளையாட்டு ஏதும் இல்லை என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள்.அதனால் . நமக்கு தெரிந்த விளையாட்டுக்களை அதை விளையாடும் முறைகளை இங்கே பதிந்து வைப்போம் வாருங்கள்.


1.தாயம்

தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும். இவ்விளையாட்டை இரண்டு முதல் நான்கு பேர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.

வரலாறு

தாய விளையாட்டு மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியாது.

தாயக் கட்டை

பொதுவாக தாயக் கட்டைகள் மரத்திலோ அல்லது வெண்கலம் போன்ற உலோகத்திலோ செய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும். சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும். சில பகுதிகளில் குறிப்பாக 7x7 தாயக்கட்ட விளையாட்டில் புளியங்கொட்டைகளை உருட்டி விளையாடுவர். நான்கு முத்துக்களை ஒரு பக்கம் வெண்ணிறமாகும்படி பாறையில் தேய்த்து விடுவர். அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பின்பு இவற்றை ஒரு தேங்காய்ச்சிரட்டையில்போட்டு உருட்டிவிடுவர். ஒன்று அல்லது இரண்டு முத்துக்கள் மட்டும் வெண்புறம்காட்டி விழுந்தால் விளையாடுபவர் அத்தனை இலக்கங்கள் நகர்த்த வேண்டும். மூன்று முத்துக்கள் வெண்புறம் காட்டி நான்காவது கருநிறம்காட்டினால் மூன்று இலக்கங்களும் நான்காவது அரைகுறை வெண்ணிறம் கொண்டிருந்தால் நான்கு இலக்கங்களும் நகர்த்தலாம். எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.

நான்முக தாயக் கட்டை

நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும். 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.

அறுமுக தாயக் கட்டை

அறுமுக தாயக் கட்டையின் எல்லாப் பக்கங்களிலும் புள்ளிகள் 1, 2, 3, 4, 5, 6 என பொறிக்கப்பட்டிருக்கும். இரு அறுமுக தாயக் கட்டைகளை உருட்டினால் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய எண்கள் விழும்.

தாயக் கட்டம்

120px-Thayam

 

தாயக் கட்டம் (ஆறு x மூன்று)

 120px-Thayam3

தாயக் கட்டம் (ஏழு x ஏழு)

இந்தியாவில் ஒவ்வொறு பகுதியிலும் ஒவ்வொறு வகையாக கட்டங்களை அமைத்து தாயம் விளையாடப்படுகிறது. தென்னிந்தியாவில்

பெரும்பாலானோர் இரு வகைக் கட்டங்களை அமைத்தே விளையாடுகின்றனர். முதல் வகை தாயக் கட்டம் காய்களை வைக்கும் பகுதி உட்புறமாக நாற்புறமும் ஆறு x மூன்று கட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் வகை தாயக் கட்டம் ஏழு x ஏழு சதுரமாக அமைக்கப்பட்டிருக்கும். தாயக் கட்டத்தை வெறும் தரையில் வரைந்தோ அல்லது மரப் பலகையில் வரைந்தோ விளையாடப்படுகிறது.

விதி முறைகள்

 120px-Thayam2

தாயக் கட்டம் காய்களுடன் நகர்த்தும் முறை

 120px-Thayam4

தாயக் கட்டம் (இன்னொரு வகை) காய்களுடன் நகர்த்தும் முறை

பின்வரும் விதி முறைகள் நான்முக தாயக்கட்டையை கொண்டு 3x6 கட்டத்தில் விளையாடுவதற்கேற்றது:

 • இரண்டு முதல் நான்கு ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை துவக்கவேண்டும்.

 • ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனித்தனியான காய் வகைகளை தேர்வு செய்து கொள்ளவேண்டும். காய்கள் உருவத்திலோ அல்லது நிறத்திலோ வேறுபட்டு இருப்பது நல்லது.

 • ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் ஆறு காய்களைக் மனைப் பகுதியில் வைத்து ஆட்டத்தைத் துவக்க வேண்டும்.

 • தாயம் இட்டபின்னேதான் மனையிலிருந்து முதற்கட்டத்தில் காய்களை வைக்க வேண்டும்.

 • காய்களை நகர்த்தும் திசையை மேலுள்ள வரைப்படத்தில் காணலாம் (பச்சைக் கோடுகள்).

 • ஒரு கட்டத்தில் ஒரு ஆட்டக்காரரின் காய்களே இருக்க முடியும். வேறு ஆட்டக்காரரின் காய்கள் அதே கட்டத்தில் நுழைந்தால் முதலிருந்த காய்கள் வெட்டப்பட்டு மனைக்கு திருப்பி அனுப்பப்படும்.

 • சில கட்டங்களின் குறுக்கே இரு கோடுகள் இருக்கும். இவை சிறப்புக் கட்டங்கள். இக்கட்டங்களில் பல ஆட்டக்காரர்களின் காய்களும் சேர்ந்து இருக்க முடியும்.

 • 1, 5, 6, அல்லது 12 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் உண்டு. பிறர் காய்களை வெட்டினாலும் மறு ஆட்டம் உண்டு.

 • காய்கள் ஒரு முறை சுற்றி வந்த பின் திரும்பவும் மனைக்குள் செல்லவேண்டும். ஆனால் வேறு ஆட்டக்காரரின் காய்களை முன்னமே வெட்டவில்லையென்றால் மனைக்குள் செல்ல முடியாது.

 • அவ்விதம் மனைக்குள் செல்ல முடியாத காய்கள் கடைசிக் கட்டத்திலேயே தங்கி விடும். சிலர் விதிமுறையை மாற்றி காய்களை சுற்றி சுற்றி வரவைப்பதும் உண்டு.

 • காய்கள் மனைப் பகுதியில் உள்ள கட்டத்துக்குள் ஏறிய பின் மீண்டும் மனைக்குள் புகுந்தால் அக்காய்களை "பழம்" என கருதி ஆட்டத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

 • முதலில் எந்த ஆட்டக்காரர் ஆறு காய்களையும் பழமாக மாற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவார்.

புதன், 18 மார்ச், 2009

புதிதாய் ஒரு விளையாட்டு

 

விடுமுறை வரப்போகிறது. குழந்தைக்கு என்ன கற்றுத்தரலாம் என் யோசிக்க ஆரம்பித்தேன். அவளுக்கு பொறுமை அதிகம், அதை சோதிப்பது என் முடிவு செய்தேன்.

வழக்கமாக போகும் கடைக்குச்சென்று புதிதாய் ஏதும் விளையாட்டு பொருட்கள் கிடைக்குமா என துளாவியதில் கிடைத்தது ஒன்று.

Mahi049

 

இத வாங்கும் போது  மேடம் கத்துக்குவாங்களா? இல்ல கத்துவாங்களா?  தெரியாம குழப்பமா  இருந்தது உண்மை. ஆனா வாங்கிட்டு வந்ததும் முதல்ல உக்கார்ந்து கத்துக்குடுக்க ஆரம்ப்ச்ச்ச நான் 2 மணி நேரம் உக்காந்து செட் பண்ணினேன். அவ்வளவு இன்ட்ரஸ்ட்டா இருந்துச்சு.

 

இதுல ஒரு மேட் இருக்கு, அதுல சின்னச்சின்ன ரப்பர்(பிளாஸ்ட்டிக்கோ) பிளாக்குகள அழுத்தி பொறுத்தனும். நம்க்கு வேணும்னு நினைக்கிற டிசைன்ல.

 

4 நாள் கழிச்சி  என் அப்பா,(ரிதன்யா தாத்தா(65)) , இதில இருக்குற ஒரு மாடல செட் செய்து என் கிட்ட  காமிச்சார், நான் உட்கார்ந்து போட்டேன்பான்னு, சந்தோசமா இருந்திச்சி( இந்த் விளையாட்டு ஆறு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்குன்னு போட்டிருக்கு.(ஆனா ஆறுலிருந்து அறுபது வரை கூட விளையாட சொல்லலாம் போல).

கூடவே ஒரு புத்தகமும் குடுக்கறாங்க, அதில பல டிசைன்கள் இருக்கு. அது  பார்த்து செய்து பழகலாம், அப்புறம் நம்ம கைவண்ணம் காமிக்கலாம்.

படங்கள பார்த்து தெரிஞ்சிக்கலாம்.

 Mahi042 Mahi043 Mahi044

இது முதன் முதலாய் செய்ய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகியது

Mahi045 Mahi046 Mahi047

இது உடன் கொடுத்த புத்தகத்திலிருக்கும் சில மாடல்கள்.

 

Mahi048 Mahi050 Mahi051

முதல் படம் (சிவப்பு நிறத்தில் உள்ளது) பிளாக்குகளை திரும்ப எடுக்க உதவும் கருவி.

 

Mahi052 

Mahi053

இது முடிந்த பின் அதனுடன் கொடுக்கப்பட்ட ஹூக் உடன் சுவற்றில் அழகாய் தொங்கவிட.(ஏதோ என்னால் முடிந்த அளவு விளக்கி

இருக்கிறேன்).

 

 

பி.கு- அந்த ரப்பர் பிளாக்குகள் சிறியதாய் இருப்பதால் ஒரு சிறிய கன்டெய்னருக்குள் போட்டு வைத்தல் நல்லது. இல்லை எனில் காணாமல் போய்விட வாய்ப்புகள் அதிகம்.

புதன், 4 மார்ச், 2009

அஜினமோட்டோ? ஆபத்து?

அதென்ன அஜினமோட்டோ? ஆபத்து? டாக்டர் கங்கா

சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும் வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்ajumudடோ. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ.

தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?
* அதென்ன அஜினமோட்டோ?

உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், சீனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.
* மோனோ சோடியம் குளுட்டோமேட்

இந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.

அப்புறம் என்ன? அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே?. அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்!
* வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது?

இதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.


* MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.

MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது. இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை. எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்!

மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.

எம்.எஸ்.ஜி. நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது.

தூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும் திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது. அதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.

இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.

சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5-மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது.
பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.

உடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸில் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.

ஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
* எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது?

1. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்

2. சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)

3. கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட்.

4. சூப் பவுடர்கள்.
நன்றி: கூடல்.காம்

சனி, 28 பிப்ரவரி, 2009

அருமையான இணையத்தளங்கள் - மழலைகளுக்காகவே

வண்ணம் தீட்டி மகிழ

 

சிறு குழந்தைகள் ஓவியம்தீட்டி மகிழவோ, கோட்டுச்சித்திரங்களில் வண்ணம் தீட்டுவதிலோ மிக்க ஆர்வம் உடையவராக இருப்பார்கள்.


அவர்களுடைய ஆர்வத்தை மேலும் வளர்க்க உதவும் வகையில் கருப்புவெள்ளைப் படங்களில் - கோட்டோவியங்களில் வண்ணம் தீட்டி அழகுக்கு அழகு சேர்த்து மகிழ ஒரு இணையத்தளம் உள்ளது.

 

image image image
80+ வகையான பிரிவுகளில், ஆயிரக்கணக்கான படங்களை வண்ணமயமாக மாற்றி இன்புறலாம். பிறந்தநாள், மிருகங்களின் சேட்டைகள், பூங்காக்கள், circus போன்றவை சில உதாரணங்கள்

.
மிக எளிதானதாகவும், வண்ணம் தீட்டிமுடிந்ததும் அச்செடுக்கும் (Print) வசதியும் இந்தத்தளத்தில் உண்டு.
இதற்காக இந்தத்தளத்தில் Java, Flash போன்றவற்றைப் பயன்படுத்தவில்லை. ஆதலால் இணையப்பக்கங்கள் (web pages) விரைவாக இயங்குகிறது.

 

இன்னும் சில தளங்கள்image

1.கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கை யான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுண்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது இந்த முகவரியில் உள்ள தளம்.
www.links4kids.co.uk/

 

2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற் பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது இந்த முகவரியில் உள்ள இணைய தளம்.

www.alfy.com/


3.இந்தத் தளத்தில் பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தை-களுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல-வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.
www.surfnetkids.com/

 

இனிய சிறிய குடும்பத்தின் இரண்டு அல்லது ஒரே குழந்தையை அனைத்து நல்ல விஷயங்களுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் எதிர்காலக் கனவாக உள்ளது. நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இதற்குப் பல வழிகளைத் தருகிறது. ஒரு நல்ல கம்ப்யூட்டரும் அதற்கான பிராட்பேண்ட் இணைப்பும் இருந்தால் குழந்தைகள் தங்கள் நேரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் துணைபுரியலாம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மன வளர்ச்சியை நல்ல முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென உள்ள பல இணையதளங்களை இங்கே பார்க்கலாம்.

1.கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கை யான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுண்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது www.links4kids.co.uk/


2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற் பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது இந்த தளம்.
www.alfy.com/


3. பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தை-களுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல-வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.
www.surfnetkids.com/


4. குழந்தைகளுக்கான இணைய தளங்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்பு-கிறீர்களா? அனைத்தையும் தராவிட்டாலும் பெரும்பான்மையான தளங்களைப் பட்டியலிடுகிறது இந்த முகவரியில் உள்ள தளம்.
www.kidsites.org/


5.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது . உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது. குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தலில் தொடங்கி அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் என கணக்கின் அடிப்-படையையும் அதன் தொடர்பான பிறவற்றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. இவை அனைத்தும் கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன.
அவற்றின் முகவரிகள்:
www.coolmath.com
www.coolmath4kids.com/
www.sciencemonster.com/
www.spikesgamezone.com/


6.யாஹூவில் இன்னொரு அருமையான குழந்தைகளுக்கான தளம் உள்ளது. கேம்ஸ், மியூசிக், குறும் திரைப்படங்கள், ஜோக்ஸ், விளையாட்டுக்கள் மற்றும் படித்துப் பாருங்கள் எனப் பல பிரிவுகளில் இந்த தளம் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
www.kids.yahoo.com/


7. உங்கள் குழந்தை, தான் கம்ப்யூட்டரில் விளையாடும் கார்ட்டூன் படங்களையும் மற்ற கேரக்டர்களையும் தன் கம்ப்யூட்டரில் (ஏன், உங்கள் கம்ப்யூட்டரிலும் கூட) திரையில் வைத்துக் கொள்ள விரும்புகிறதா? அல்லது ஹோம் பேஜாக வைத்து இன்டர்-நெட்டை இயக்கியவுடன் வர வேண்டும் என விரும்புகிறதா? இத்தகைய ஆவலை நிறைவேற்ற ஒரு தளம் இயங்குகிறது. குழந்தைகள் உலகின் பல கேரக்டர்கள் இங்கு உள்ளன. இந்த கேரக்டர்கள் பங்கு கொள்ளும் சிறிய கதைகள் குழந்தைகளின் மனதில் நல்ல உறுதியை வளர்க்-கின்றன.
www.hitentertainment.com/


8. இரண்டு வயதிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான அனைத்து விளையாட்டுக்களையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்-களையும் தருகிறது www.pbskids.org/என்ற முகவரியில் உள்ள தளம். இந்த வகையில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய தளங்களாக
www.nickjr.com/
www.uptoten.com/
www.kidsgames.org/
www.gameskidsplay.net/
ஆகியவை உள்ளன.


9. இத்தகைய விளையாட்டுக்களோடு குழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல் விஷயங்களையும் சேர்த்து விளையாட்டுக்கள் மூலமாகத் தரும் ஓர் இணைய தளம் இது. இந்த தளத்தில் குழந்தைகள் செயல்படுகையில் பெற்றோர்களும் உடன் இருந்து அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். கம்ப்யூட்டர், மேத்ஸ், பிரச்சினைகளைத் தீர்த்து வெற்றிகாணும் வழிகள், படித்து சிந்தித்து தகவல்களைக் கைக் கொள்ளும் வழிமுறைகள் எனப் பல வகைகளில் குழந்தைகளின் பொழுது போக்கும் வழிகளிலேயே நிறைய அறிவு வளர்க்கும் விஷயங்களையும் தருகிறது இந்த தளம்.
www.playkidsgames.com/


10. அனைத்து வயதிலும் உள்ள குழந்தைகளுக்கான தளம் www.funbrain.com என்பது. கேம்ஸ் விளை-யாடுகை-யில் குழந்தைகளிடம் தகவல்-களைப் பெற்று தொடரும் வகையில் கேம்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாடும் ஆசையுடன் வரும் குழந்-தைகளின் ஆர்வம் தூண்டப்பட்டு அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய வழிகளையும் மேற்கொள்கிறது இந்த தளம். சொற்களைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறது. குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களுக்கான பாடத்திட்டத்திற்கேற்ப விளையாட்டுக்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பல விளையாட்டுக்கள் வடிவமைக்கப்பட்டுத் தரப்படுகின்றன.
www.funbrain.com/


11. என் மகள் மட்டும் விளையாடும் வகையில் பெண் குழந்தைகளுக்கான தளம் எதுவும் உள்ளதா? என்று வாசகர்கள் கேட்கலாம். இவர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் உள்ளது ஒரு தளம். வளரும் குழந்தைகள் கம்ப்யூட்டரைச் சாதாரணமாகப் பயன்படுத்தினாலே அவர்களின் சிந்திக்கும் திறன் சீராக்கப்பட்டு கூராகும்.
www.everythinggirl.com/


இதில் மேலே தரப்பட்டுள்ள தளங்கள் இன்னும் பல படிகள் முன்னேறிச் சென்று பல வழிகளைத் தேர்ந்தெடுத்துத் தருகின்றன. உங்கள் குழந்தைகளைக் கம்ப்யூட்டருக்குப் பழக்குங்கள். கம்ப்யூட்டர் கெட்டுப் போய்விடுமோ என்று தயங்காதீர்கள். அதற்கான பாதுகாப்பு வழிகளைக் கொண்டு அவர்களுக்கும் கம்ப்யூட்டரைக் கற்றுத் தாருங்கள். அவர்களை இழுத்துக் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் மேலே சொல்லப்பட்ட தளங்கள் தருகின்றன. இன்னும் பல தளங்கள் குழந்தைகளுக்கென குவிந்து கிடக்கின்றன. அவற்றையும் நீங்கள் தேடி எடுத்துப் பயன்படுத்தலாம்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009