சனி, 20 டிசம்பர், 2008

அம்மா அம்மா என்னம்மா

அம்மா

அம்மா அம்மா என்னம்மா

அழகாய் முத்தம் தந்திடுவாய்

கண்ணைப் போல என்னையே

காக்கும் கருனை தெய்வம் நீ

அம்மா நானும் வளர்ந்திடுவேன்

உலகம் எல்லாம் புகழ்ந்திடுவேன்



குள்ள வாத்து

குள்ள குள்ள வாத்து

குவா குவா வாத்து

மெல்ல உடலைச் சாய்த்து

மேலும் கீழும் பார்த்து

செல்லமாக நடக்கும்

சின்ன மணி வாத்து



சின்னப் பூனை

சின்னச் சின்னப் பூனையாம்

சீறிப் பாயும் பூனையாம்

கன்னங்கரியப் பூனையாம்

கருப்பு மீசைப் பூனையாம்

இரவில் சுற்றும் பூனையாம்

எலியைப் பிடிக்கும் பூனையாம்

புலியைப் போன்ற பூனையாம்

புத்திசாலிப் பூனையாம்


மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்

மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம்

தித்திக்கும் மாம்பழம்

அழகான மாம்பழம்

தங்கநிற மாம்பழம்

உங்களுக்கு வேண்டுமா

இங்கே ஓடி வாருங்கள்

பங்கு போட்டுத் தின்னலாம்

ஒரு தெய்வம் தந்த பூவே!

ஒரு தெய்வம் தந்த பூவே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல் நீ வந்தாயே!
சுவாசமாய் நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

விடுகதைகள்

விடுகதைகள்


1. முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன?

வெண்டிக்காய்

2. வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?

நிழல்

3. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?

கடிதம்

4. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?

மிளகாய்

5. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?

கண்ணீர்

6. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?

காற்று

7. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?

பென்சில்

8. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

பூமி

9. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?

முட்டை

10. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?

பாம்பு

11. அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?

கடல்நீர்

12. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?

பலாப்பழம்

13. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?

தீக்குச்சி

A Little Old Man

A Little Old Man

little old man and I fell out;
How shall we bring this matter about?
Bring it about as well as you can;
Get you gone, you little old man.

A Kiss When I Wake

A Kiss When I Wake
A kiss when I wake in the morning
A kiss when I go to bed,
A kiss when I burn my fingers,
A kiss when I bump my head.
A kiss when my bath begins
A kiss when my bath is over,
My mamma is as full of kisses
As nurse is full of pins.
A kiss when I pull her hair,
A kiss when I play with my rattle;
She covered me all over with kisses
The day that I fell down stair.
A kiss when I give her trouble,
A kiss when I give her joy;
There's nothing like mamma's kisses
To her own little baby boy

செவ்வாய், 16 டிசம்பர், 2008

3 மென்புத்தகங்கள் உங்களுக்காக

வெற்றிகரமான மின் வணிகத்துக்கு 5 வழிகள் : 5 Steps to Successful E-Commerce

அடோபி போட்டோஷாப் - குறுக்குவழிச் சாவிகளின் தொகுப்பு : Adobe Photoshop short cut keys.

R.E. Asher and E.Annamalai இருவரின் பங்கேற்பில் ஆரம்பநிலைத் தமிழ் கற்றல் ஆங்கிலம் வாயிலாக. : Colloquial Tamil.

இணையிறக்கச் சுட்டிகள் கீழே:
ஆத்திச்சூடி,திருக்குறள், சிலப்பதிகாரம் இன்னும் பல நம் காவிய புத்தகங்கள் இப்பொழுது கைபேசியிலும் படிக்கும் வண்ணம் வருகிறது.

இதோ இங்கே

http://www.fublish.com/beta/browse


என்ன பதிவு பண்ண வேண்டும்.

ஈ-புத்தகம்

ஜேம்ஸ்பாண்ட் 007 எல்லோருக்கும் தெரியும், அவரின் ஈ-புத்தகம் ஒன்று இங்கே.

மாயவி-யின் புத்தகம் ஒன்று

குழந்தைகளுக்கு பிடித்த Children Comic புத்தகங்கள்

http://www.kelvi.net/books/comics/index.php
குழந்தைகளுக்கு பிடித்த Children Comic (ஆக்கிலத்தில்) புத்தகங்கள் இங்கு நிறைய உள்ளது. இது போக 50க்கும் மேற்பட்ட Comic புத்தகங்கள் உள்ளது. ஆனால் எல்லாம் தனி தனி பக்கங்களாக JPEG வடிவில் சேமிக்கப்பட்டுள்ளது.

SNOW WHITE AND THE SEVEN DWARFS
THE UGLY DUCKLING
Hans Christian Anderson
THE PIED PIPER
Jack and the Beanstalk
Sleeping Beauty
Fri 14 Nov 2008 02:43:16 AM MST
Three Little Pigs
Beauty and the Beast
Goldilocks and the Three Bears
Little Red Riding Hood
CINDERELLA ...........

http://www.kelvi.net/books/comics/index.php
படித்து சொல்லுங்கள் எல்லோருக்கும்.