வியாழன், 27 ஜூன், 2013

திருமண நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும்
நன்றி...நன்றி....நன்றி.....
ம்ம்ம்  12 வருடங்கள் ஓடியே போச்....
சந்தோசம்
சண்டை,
கோபம்,
வருத்தம்,
சலிப்பு
இப்படி எல்லாத்தையும் டேஸ்ட் பண்ணி பார்த்தாச்சு.... இதும் நல்லாத்தான்யா இருக்கு..,,,
மாசக்கணக்கா பேசாமக்கூட இருந்திருக்கோம்.... ஆனா சண்டை போடாம இருந்ததில்லை....
பொண்ணு பஞ்சாய்த்துன்னா பண்ண வருவாங்கன்னா இன்னும் சண்டை பலமா இருக்கும்.....
நிறைய இழந்து, நிறைய பெற்று,,,,,, அதானே கண்ணால வாழ்க்கை.....

இப்பவும் சில பொண்ணுகள பாக்கும் போது “யாரோ... யாரோடி உன்னோட புருசன் “ னு பாட்டு மனசுல ஓடும்.....
எட போட பழகிட்டம்ல....

“உன்ன மாதிரி ஒரு ஜென்மத்த பாத்ததே இல்லனு பல தடவ சொல்லிருக்கேன்’’’  சில சமயம் கோபத்திலயும், பல சமயம் சந்தோசத்தில மனசுக்குள்ளயும்.....
சண்டை பல நேரத்தில நடந்தாலும் ஊட்டுகுக்குள்ளயே ஒரு சமாதானப்புறா வளர்ரதால பொழப்பு ஓடுது....
எல்லா மனைவிகளும் சொல்ற,  பொழைக்கத்தெரியாத ஆளுன்னு சொல்லிட்டு என்கூட 12 வருசமா பொழப்பு நடத்தறாக...என்கூட
நாமாதான் முந்திர்க்கொட்டை மாதிரி காதல்ல இருந்து கண்ட கத்தரிக்கா வரைக்கும் கண்ணாலத்தப்பவே உளறியாச்சே.... உண்மைய சொல்றேங்கற பேர்ல.....
ஆனா அதும் பல சமயம் காப்பாத்துது....
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்பாங்க.....நாமதான் சாமியே கும்பிடறதில்லயா....
கொஞ்சம் சந்தேகம் சாமிமேல...... கும்பிடறதில்லைன்னு இப்படி கொடுத்துட்டாறோன்னு....
பேப்பரும் போனாவும் கொடுங்கன்னு கேக்கும் போது சந்தோசமா  இருக்கும்... சில சம்யம் விடுதலையோன்னு
இதில கைஎழுத்து போடுங்கன்னு சொல்லும் போது ....பக்கு பக்குன்னு இருக்கும் பல சமயம்.... உட்டுட்டு போய்டுவாங்களோன்னு ....
கிராமத்தில இருந்து, நகரத்துக்கு,  பருவத்தில சட்டுன்னு பறிச்சு நட்ட செடி அவங்க,.... முள்ளும் முரடுமான செடின்னாலும்...

கருத்துகள் இல்லை: