விடுமுறை வரப்போகிறது. குழந்தைக்கு என்ன கற்றுத்தரலாம் என் யோசிக்க ஆரம்பித்தேன். அவளுக்கு பொறுமை அதிகம், அதை சோதிப்பது என் முடிவு செய்தேன்.
வழக்கமாக போகும் கடைக்குச்சென்று புதிதாய் ஏதும் விளையாட்டு பொருட்கள் கிடைக்குமா என துளாவியதில் கிடைத்தது ஒன்று.
இத வாங்கும் போது மேடம் கத்துக்குவாங்களா? இல்ல கத்துவாங்களா? தெரியாம குழப்பமா இருந்தது உண்மை. ஆனா வாங்கிட்டு வந்ததும் முதல்ல உக்கார்ந்து கத்துக்குடுக்க ஆரம்ப்ச்ச்ச நான் 2 மணி நேரம் உக்காந்து செட் பண்ணினேன். அவ்வளவு இன்ட்ரஸ்ட்டா இருந்துச்சு.
இதுல ஒரு மேட் இருக்கு, அதுல சின்னச்சின்ன ரப்பர்(பிளாஸ்ட்டிக்கோ) பிளாக்குகள அழுத்தி பொறுத்தனும். நம்க்கு வேணும்னு நினைக்கிற டிசைன்ல.
4 நாள் கழிச்சி என் அப்பா,(ரிதன்யா தாத்தா(65)) , இதில இருக்குற ஒரு மாடல செட் செய்து என் கிட்ட காமிச்சார், நான் உட்கார்ந்து போட்டேன்பான்னு, சந்தோசமா இருந்திச்சி( இந்த் விளையாட்டு ஆறு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்குன்னு போட்டிருக்கு.(ஆனா ஆறுலிருந்து அறுபது வரை கூட விளையாட சொல்லலாம் போல).
கூடவே ஒரு புத்தகமும் குடுக்கறாங்க, அதில பல டிசைன்கள் இருக்கு. அது பார்த்து செய்து பழகலாம், அப்புறம் நம்ம கைவண்ணம் காமிக்கலாம்.
படங்கள பார்த்து தெரிஞ்சிக்கலாம்.
இது முதன் முதலாய் செய்ய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகியது
இது உடன் கொடுத்த புத்தகத்திலிருக்கும் சில மாடல்கள்.
முதல் படம் (சிவப்பு நிறத்தில் உள்ளது) பிளாக்குகளை திரும்ப எடுக்க உதவும் கருவி.
இது முடிந்த பின் அதனுடன் கொடுக்கப்பட்ட ஹூக் உடன் சுவற்றில் அழகாய் தொங்கவிட.(ஏதோ என்னால் முடிந்த அளவு விளக்கி
இருக்கிறேன்).
பி.கு- அந்த ரப்பர் பிளாக்குகள் சிறியதாய் இருப்பதால் ஒரு சிறிய கன்டெய்னருக்குள் போட்டு வைத்தல் நல்லது. இல்லை எனில் காணாமல் போய்விட வாய்ப்புகள் அதிகம்.
2 கருத்துகள்:
ஆஹா..நல்லாவே விளக்கியிருக்கீங்க..இது கொஞ்சம் சுவாரசியமான விளையாட்டுதான்..அதே சமயம் ஒவ்வொன்றாக தொலைந்து போகும் வாய்ப்புகள் அதிகம்! பட்டூ செய்ததை போடவே இல்லையே?
வருகைக்கு நன்றி சந்தனமுல்லை.
ம் தொலைந்து போகாமல் இருக்கத்தான் சிறு பெட்டியில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். முதல் மூன்று படங்களில் பட்டுவின் பங்கு உள்ளது. முதலில் அதில் ஒற்றை,இரட்டை,மூன்று,நாண்கு என்ற பிட்களின் அமைப்புகளை சொல்லிக்கொடுத்தேன், அதற்கு பார்டர் செய்தாள். அதன் படம் போடவில்லை, இன்றே போட்டு விடுகிறேன்.
கருத்துரையிடுக