புன்னகைதேசம் – நான் முதலில் பார்த்த வலைப்பூ எனலாம், என் முதலாளி தாய்லாந்து சுற்றுபயணம் போக இருந்த் சமயம் தாய்லாந்து பற்றி துழாவும் போது கிடைத்த வலைப்பூ. (அவங்ககிட்ட தனி மடல்ல எப்படி எழுதரிங்கன்னு கேட்டாதுக்கு பேனாவிலதான்னு பதில் வந்துச்சு, அட அப்படியா பேனாவுல எழுதலாமான்னு ஒரே அச்சரியம், ஏன்னா நான் கையெழுத்து போட மட்டும்தான் வச்சிருக்கேன். )அதைப்படிக்க ஆரம்பித்து அதில் தமிழி வலைப்பூக்கள் என்ற வார்த்தையை கூகுளாண்டவரிடம் கொடுத்தபோது கிடைத்த தமிழ் வலைப்பூக்களின் பட்டியலை பார்த்து பிரமித்துப்போனேன்.
அன்றைக்கு ஆரம்பித்ததுதான் வலைப்பூ படிக்கும் பழக்கம். இதே கிட்டதட்ட 10 மாதங்களில் கிட்டதட்ட 4 வலைப்பூக்கள்.
ஆனால் நிலா வின் வலைப்பூதான் என் மகள் பற்றி எழுத வைத்தது. இது என் இரண்டாவது வலைப்பூ. அப்புறம் அமித்துஅம்மா,என் வானம், சித்திரக்கூடம், பூந்தளிர், குட்டீஸ் கார்னர் என என் பெண்ணுக்கு காண்பித்து அவர்களிடம் உனக்கும் ஆரம்பிக்கலாமா என கேட்டு ஆரம்பித்தேன், ஆனால் இப்படி பட்டர்பிளை அவார்ட்ல கொண்டு வந்து நிறுத்தும்னு எதிர்பார்க்கலங்க. நன்றி பூந்தளிர் (திஷு அம்மா). இன்னும் நல்ல விதமா எழுதனுமேன்னு பயம் தான் வருது. ஆனா ஒன்னு திஷுவ அவங்க அம்மா ரெம்ப வேலை வாங்கறாங்கன்னு தெரியுது. (இதுவும் ஒரு அவார்ட் தாங்க)
ஆனா பாருங்க
(Ctrl+c-Ctrl+v)விருதின் விதிப்படி ஏழு பேருக்கு நான் பகிர்ந்து கொடுக்க வேண்டும். நான் வாசிக்கும் பலர் ஏற்கெனவே வாங்கி விட்டார்கள். சில ஜாம்பவான்களிடமிருந்து வாங்க மட்டும் தான் முடியும். கொடுக்க முடியாது. ஆகவே நான் நாலு பேரிடம் மட்டும் பகிர ஆசைப்படுகிறேன்.
புன்னகைதேசம் – நான் முதலில் பார்த்த வலைப்பூ
Synapse அர்ஜுன் அம்மா யாரு?" "நாலரை பால் குடுக்குறவங்க தான் அர்ஜுன் அம்மா" ஆனா நான், பால்
குடிக்க மாட்டேன்னு அடம் புடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா!!!!!!!!!!!!!!
நான் விரும்பி படிக்கும் இன்னும் ஒரு வலைப்பூ, அவங்க அறிமுகம் அசத்தலா இருந்துச்சு.
மழைக்காதலன் என் குழும நண்பராய் அறிமுகம், பிடித்தது அவரது நட்புக்கவிதைகள்
தணிகை - என் குழும நண்பராய் அறிமுகம், பிடித்தது அவரது கவிதைகள், நான் மாப்ள என்று
கூப்பிடும் ஒரே ஆள்
இவங்க நாலு பேருக்கும் எனக்கு கிடைச்சத பகிர்ந்தளிக்கிறேன்.
என் மற்றைய வலைப்பூக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக