அம்மா
அம்மா அம்மா என்னம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்
கண்ணைப் போல என்னையே
காக்கும் கருனை தெய்வம் நீ
அம்மா நானும் வளர்ந்திடுவேன்
உலகம் எல்லாம் புகழ்ந்திடுவேன்
குள்ள வாத்து
குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து
சின்னப் பூனை
சின்னச் சின்னப் பூனையாம்
சீறிப் பாயும் பூனையாம்
கன்னங்கரியப் பூனையாம்
கருப்பு மீசைப் பூனையாம்
இரவில் சுற்றும் பூனையாம்
எலியைப் பிடிக்கும் பூனையாம்
புலியைப் போன்ற பூனையாம்
புத்திசாலிப் பூனையாம்
மாம்பழம்
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
தங்கநிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டுத் தின்னலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக