வெள்ளி, 12 டிசம்பர், 2008

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள ச்சூ ச்சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள ச்சூ ச்சூ மாரி

ஊத்தப்பல்லு ரங்கம்மா
உள்ள வாடி ரங்கம்மா ச்சூ ச்சூ மாரி
உனக்கு புருஷன் யாரம்மா
ஊளைமூக்கு ஆளம்மா ச்சூ ச்சூ மாரி


அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா ச்சூ ச்சூ மாரி


சங்கிலி புங்கிளி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி
சங்கரன்கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி ச்சூ ச்சூ மாரி

வேணாண்டா ராசு மாட்டிக்குவே வேணாண்டா டேய் ராசு
போடீ மாரி


தட்டான் தட்டான் லைட்டடி
கோழிக்குஞ்சுக்கு லைட்டடி ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவலை
குழம்பு வச்சு ஊத்தடி ச்சூ ச்சூ மாரி


பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ ச்சூ ச்சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டைய பார்த்து கேட்டுக்கோ ச்சூ ச்சூ மாரி

தோசை பார்த்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ணை அடிச்சிச்சாம்
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி விலக்கி விட்டுச்சாம் ச்சூ ச்சூ மாரி

கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி ச்சூ ச்சூ மாரி
கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி

ச்சூ ச்சூ மாரி


படம்: பூ
பாடல்: நா.முத்துக்குமார்
இசை: எஸ்.எஸ்.குமரன்
பாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா, ஸ்ரீமதி

நாட்டினரின் பெயர்களும், ஒலிவடிவில் உச்சரிப்பும்

நான் பார்த்த ஒரு வித்தியாசமான இணையத்தளம் இது :
http://www.howtosaythatname.com/
இந்தத்தளத்தில் ஒவ்வொரு நாட்டினரின் பெயர்களையும் அவற்றின் உச்சரிப்பின்
ஒலிவடிவத்துடன் கொடுத்துள்ளனர்.
பெயர்களுக்கு எதிரே உள்ள ஒலிப்பானில் அழுத்தினால் அந்தப் பெயர் அழகான
உச்சரிப்பில் தெளிவாகக் கேட்கிறது.
சைனீஸ் முதல் வியட்னாமீஸ் வரை குறிப்பிட்ட நாட்டினரின் பெயர்களும்,
ஒலிவடிவில் உச்சரிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 9 டிசம்பர், 2008

இன்றைய கால கட்டத்தில் ஆங்கிலம் இல்லாமல் எந்த தகவல் தொழில் நுட்பமும் இல்லை. அந்த அளவுக்கு ஆங்கிலத்தின் பயன் மிகவும் அவசியமாக உள்ளது. ஆனால் இன்று இணைய வழி ஆங்கில பயிற்சியானது மிகவும் பிரபலமாகி வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் ஆங்கிலம் வலைப்பூக்கள் இந்த வலையில் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான தமிழ் வழி பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வலைப்பதிவில் ஒலி வடிவமாகவும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த முறையானது மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை இந்த வலைப்பூக்களை பயன்ப்படுத்தினால் மீண்டும் ,மீண்டும் பயன்ப்படுத்த ஆர்வம் அதிகரிக்கும்.

http://www.aangilam.blogspot.com/

ஞாயிறு, 23 நவம்பர், 2008

தொட்டா சிணுங்கி



அப்பாவும் நானும் ஆத்துக்கு (ஆறு) போயிருந்தோம்
அங்க எங்கப்பா ஒரு செடிய காமிச்சு பட்டூ இதான் தொட்டாச்சிணுங்கினு சொன்னாங்க.

ஆமா தொட்டா உன்ன மாதிரி சினுங்கும்னு சொன்னாங்க,
முள்ளு இருந்துச்சா, எனக்கு தொட பயாமிருந்துச்சு, அப்பறம் தொட்டு பாத்தேன், அட தொட்ட உடனே இலையெல்லாம் சுருங்கிடுச்சு.
நீங்களும் படத்த பாருங்க.

வீட்டுக்கு எடுத்துட்டு வரலாம்னு கேட்டா ஆத்துல தண்ணி அதிகமா இருக்கிற எடத்துலதான் வரும்னு சொல்லிட்டாங்க அப்பா.

செவ்வாய், 4 நவம்பர், 2008

ஈ- காமிக்ஸ் தமிழ்ல

அப்புறம் எல்லாருக்கும் ஒரு விசயம் சொல்லபோறன்,
அது என்னன்னா ......
எல்லாருக்கும் காமிக்ஸ்னா ரெம்ப புடிக்கும்னு எனக்கு தெரியு, அதனால எங்கப்பா கிட்ட நச்சி ஒருவழியா அவரும் ஒரு எடத்த பாத்து எனக்கும் எடுத்து தந்தார், அதுல கலரிங் பண்றது, பஜில், அப்புற ஈ- காமிக்ஸ் தமிழ்ல, ஆங்கிலத்தில, தெலுங்குல,கன்னடத்துல எல்லாம் இருக்கு, நீங்களும் பாருங்க
அதுக்கான சுட்டிதா இது.
http://www.kidskhushi.com/

என்ஜாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஞாயிறு, 2 நவம்பர், 2008

என்னத்த சொல்ல

அப்பா ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு போன் பண்ண எடுத்தது நான்
அப்பா "ஹலோ"
நான் "அப்பா"
அப்பா "மயிலு என்ன பண்ற"

நான் " நீ என்னப்பா பண்ற"
அப்பா " ம்ம்ம்ம் உங்கூட பேசிட்டிருக்கேன்"

நான் "அய்யோ அப்பா ஆபிஸ்ல என்ன பண்ணிட்டிருக்க"
அப்பா "அப்பா ஆபிஸ்ல இருந்து உன்கூட பேசிட்டிருக்கேன்"

நான் "அய்யோ அப்பா ஆபிஸ்ல என்ன ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேலை பண்ணிட்டிருக்க"
நான் "அப்பா போன வச்சிருவேன் "

அப்பா " ஹா ஹா ஹா"
அப்பா "இருடா அம்மா கிட்ட குடு"

நான் "ம்ம்ம்ம்ம் அப்படி சொல்லு சும்மா ஜோக் பண்ணக்கூடாது சரியா"

செவ்வாய், 21 அக்டோபர், 2008

மாலை நேரம்

இது கோவையின் சனிக்கிழமையின் (18/10/2008 (மாழை)மாலைப் பொழுது (அவினாசி சாலை) இதுவும் நோக்கியா 6233 ல் எடுத்ததுதான் இது எடுத்த 15 நொடிகளில் மழை கொட்ட ஆரம்பித்ததுதான்

வானவில்

என் வானவில்

ரிதன்யாவின் ரசிகர்களில் ஒருவர்
ரிதன்யா போட்டோவுக்காக இந்த கவிதை

மனதை மயக்கும் ஒரு
மாலையில் வெளிவந்தாய் நீ!
குளிர்காற்றோடு அஸ்தமனத்தை
காண்பதற்காய்!
மனித எண்ணங்களின் பலமுகங்களை
பிரதிபலிக்கும் வானவில்லின்
இயற்கையினை வியந்து
இதழ்விரித்து உன் தந்தையை
அழைத்தாய்!
கருவிழிகளை திறந்து நீ
வானவில்லை நோக்குகையில்
ஒரு தேவதையின் அழகான
முகபாவங்களை ரசிக்கிறேன் நான்!
உன்னையே வியக்கவைத்த
வானவில் அழகுதான் ஒத்துகொள்கிறேன்
என்னை வியக்க வைத்த நீ
வானவில்லை விட அழகுதான்
என்பதை உலகம் ஒத்துகொள்ளதான் வேண்டும்

தணிகை(மாமா)
============================================
ரிதன்யாவின் அத்தை தேனி(கொழும்பிலிருந்து)
வானவில்லின் வர்ணங்களை
ரசிக்க மறந்து
உன் ஆச்சர்யத்தின்
அழகை ரசிக்க தொடங்குகிறேன்

சின்ன இதழ் விரிந்து
கரு விழிகள் உயர்த்தி
பார்க்கும் போது
வானவில் ஒரு மாத்திரையா?

=============================================
வானவில்லின் அத்தனை வண்ணமும்
உன் ஆச்சரியங்களின் முன்
போட்டியிட முடியவில்லையோ!!!

(ரிதன்யாவின் அத்தை பூ பூவா பூர்ணிமா)

வானவில்

வானவில்

வானவில்

இரண்டு வானவில்

வானவில் பாருங்கள்,
அழகான ஒரு மாலைப்பொழுது
இன்னும் அழகானது
வீட்டினுள் இருந்த என்னை
என் பெண்ணின் சத்தம்
வெளியே வர வைத்தது.
'அப்பா வானவில் பாரு'
வந்து பார்த்துவிட்டு
கேமிரா இல்லாதாதால்
அவசரத்திற்கு
கையிலிருந்தது நோக்கியா 6233
அதில் எடுத்தது .
எப்படி இருக்கிறது பார்த்து சொல்லுங்கள்.

===============================================

திங்கள், 20 அக்டோபர், 2008

ஒரு நாள் பாட்டியோடு போனில்
பாட்டி: ஊருக்கு வரலியா

நான் : மறந்திட்டேன் பாட்டி

பாட்டி: என்னய மறந்திட்டியா பாப்பு ?

நான் : அய்யோ அய்யோ உன்ன மறக்கல பாட்டி ஊருக்கு
வர மறந்திட்டேன்
பாட்டி : சரி தீபாவளிக்கு வரியா.

நான்: ம் வெள்ளியன்னிக்கு வர்ரேன்

பாட்டி : அத்த நீ வி ஐ பி யாம் நீங்க வரமாட்டிங்க அப்படி
சொல்லராங்க

நான் : அப்படியெல்லாம் சொல்ல கூடாது சொல்லுங்க
இல்லனா பாப்பா வந்தா அடிப்பானு சொல்லுங்க

பாட்டி: ஹா ஹா ஹா

நான்: அய்யே சிரிக்காதீங்க.

வெள்ளி, 17 அக்டோபர், 2008

நாந்தான் பட்டூ

என்ன மயில் படம்னு பாக்கிறீங்களா, அது எங்கப்பா என்ன அப்படித்தான் கூப்புடுவாரு. அதனால தான்

Posted by Picasa